Wednesday, September 23, 2009

"ஒரிஜினல்" திருட்டு விசிடி - உன்னைப்போல் ஒருவன்

வலை உலக பெருமக்கள் எல்லாரும் உன்னைப்போல் ஒருவன் படத்த பத்தி பல கோணங்கள்ள சொல்லிருக்காங்களே, சரி அந்த படத்தையும் தான் திரையரங்கத்துக்கு போய் பாப்போம் னு முடிவு பண்ணிட்டேன்...

ரொம்ப பிஸியா இருந்த எங்க அம்மாவையும் கூட்டிட்டு எங்க ஊருல இருக்க ஒரே ஒரு தியேட்டருக்கு மாட்டினி ஷோ பாக்க கெளம்பினோம்... எல்லா ஊருலயும் படம் ரிலீஸ் ஆகி முதல் வாரத்துல கூட்டம் கும்மியடிக்கும்... ஆனா நாங்க போன தியேட்டருல பாருங்க எண்ணி இருவது பேர் தான் இருந்துருப்பாங்க...

அவங்களும் யாருன்னு சொல்லிருரேன்..

கணவன்,மனைவி அவங்க குழந்தைங்க ரெண்டு பேர் -4
பென்ஷன் வாங்குற ஒரு தம்பதி -2
மூன்று டி-ஷர்ட் வாலிபர்கள் -3
பத்து வயசுலயே தம்மடிக்கிற பசங்க -4
லாரி டிரைவர்ஸ் -5
அப்புறம் நானும் எங்க அம்மாவும் -2

மொத்தம் இருவது வந்துருச்சா??!! அவ்ளோ பேரு தாங்க வந்திருந்தாங்க படத்த தியேட்டருல பாக்க... ரொம்ப கவலைய போச்சு...

படம் ரிலீஸ் ஆகி நாலு நாள்ல "ஒரிஜினல்" திருட்டு விசிடி யோ இல்ல watch ஆன்லைன் லிங்க் ஒ கிடச்சுருது... அப்புறம் யாருங்க படம் பாக்க தியேட்டருகேல்லாம் வருவா?? ஒரு மனுஷன் தியேட்டருக்கு ஒரு டிக்கெட்டுக்கு கொடுக்குற காசுல நாலு படம் குடும்பத்தோட பாத்துரலாம்ங்கற எண்ணம் நெறைய பேருக்கு வந்துருச்சுல்ல... என்ன தான் திருட்டு விசிடி ல பாக்காதிங்க னு எல்லாரும் மைக் வச்சு சொன்னாலும் படம் பாக்குறது அவன் அவன் காசுலதானே.. தான் சொந்த காச எவனோ நடிகறதுக்கு எதுக்கு கொடுக்கணும்... அதே படம் இருவது முப்பது ரூபாய்க்கே கிடைக்கும்போது நூறு இருநூறு னு எதுக்கு செலவளிக்கணும்??!! இப்படி லாம் பல கேள்வி வருது...
இந்த காரணத்துக்காகவே எங்க ஊருல மூணு நாலு தியேட்டர இழுத்து மூடிட்டாங்க... இருக்கிற ஒரு தியேட்டரையும் எப்ப மூடுவாங்க னு தெரியல...
இங்க என்னோட நண்பர்கள் கிட்டவே ஏன்டா தியேட்டருல படம் பாக்குறது இல்ல னு கேள்வி கேட்டா அவங்களோட பதில் என்ன தெரியுமா ?? "இதெல்லாம் ஒரு தியேட்டரு, இங்க லாம் மனுஷன் படம் பாப்பானா? " அப்படி னு என்னவோ இவிங்க பொறந்ததுல இருந்தே சத்யம் மாயாஜால் இந்த மாதிரி இடத்துல தான் படம் பாக்குற மாதிரி பேசுவாங்க... சின்ன வயசுல இந்த தியேட்டருக்கு ஆடிக்கு ஒரு தரம் அம்மாவசைக்கு ஒரு தரம் எதோ படத்துக்கு கூட்டிட்டு போக சொல்லி கெஞ்சுனது எல்லாம் இவங்களுக்கு மறந்து போச்சு...

எனக்கு மறக்கலைங்க.. தியேட்டருல படம் பாக்குறது சந்தோசம்... விசில் சத்ததோட படம் பாக்குறது, இண்டேர்வல்ல சாப்பிடுற ஐஸ் கிரீம் , சமோசா , பாப் கார்ன் , அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்குறது இப்படி எல்லாம் நினப்புல இருக்கு... எல்லா படத்தையும் தியேட்டருல பாக்க வாய்ப்பு இல்லனாலும் ஒண்ணு ரெண்டு படத்தையாவது கண்டிப்பா தியேட்டருல தான் பாக்கணும் னு தோனுது... போக போக தியேட்டரு னு ஒண்ணு எங்க ஊருல இல்லாமயே போயிருமோ னு கவலையா இருக்கு......!!!

சன் டிவி டாப் 10 மூவிஸ் லா வரமாதிரி " இந்த படத்த பத்தி வலை உலக நண்பர்கள் ஏற்கனவே தேவையான அளவு அலசிட்டனால " இந்த படத்த பத்தி புதுசா சொல்றதுக்கு என்கிட்டே ஒன்னும் இல்லைங்க...

இருந்தாலும் ஒண்ணு சொல்லிக்குறேன் படம் முழுக்க இறுக்கமான முகத்தோட வர கமல் கடைசி கட்சியில போலீஸ் வண்டி வேணாமா னு மோகன் லால் கேக்குறப்போ "வேண்டாம்" னு சொல்லி சிரிப்பாரே... கமல் அழகுங்க....!!!

பி. கு: இன்னும் இந்த ஊருல உன்னைப்போல் ஒருவன் விசிடி வரலைங்க !!!

26 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

ஜீவன் said...

///அதே படம் இருவது முப்பது ரூபாய்க்கே கிடைக்கும்போது///

காசு கொடுத்துதானே DVD வாங்குறோம் அப்புறம் எப்படி அது திருட்டு DVD ஆகும்!!!

ரசனைக்காரி said...

@ஜீவன்
ரொம்ப புத்திசாலிங்க நீங்க...!!
உங்கள மாதிரி ஆளுங்கள தான் தேடிட்டு இருக்கேன்.....

ராஜ நடராஜன் said...

//எல்லா படத்தையும் தியேட்டருல பாக்க வாய்ப்பு இல்லனாலும் ஒண்ணு ரெண்டு படத்தையாவது கண்டிப்பா தியேட்டருல தான் பாக்கணும் னு தோனுது... //

அதுல உன்னைப் போல் ஒருவனும் ஒன்று.

திருட்டு வி.சி.டி தானே தப்பு.திருடாத வி.சி.டி இருந்தா?

ஆமா எங்க ஊருல இன்னும் திருட்டு வி.சி.டி வரலைன்னீங்களே!அது எந்த ஊரு?திருட்டு வி.சி.டி காரங்க டேரா போடப் போறாங்க பாருங்க:)

நையாண்டி நைனா said...

ஹூம் நான் என்னமோ எதோன்னு நெனச்சி வந்தேன்....

ரசனைக்காரி said...

@ ராஜ நடராஜன்

//திருட்டு வி.சி.டி தானே தப்பு.திருடாத வி.சி.டி இருந்தா?//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... உங்க மொக்கைக்கு அளவே இல்லையா??!!

//ஆமா எங்க ஊருல இன்னும் திருட்டு வி.சி.டி வரலைன்னீங்களே!அது எந்த ஊரு?திருட்டு வி.சி.டி காரங்க டேரா போடப் போறாங்க பாருங்க:)//

திருட்டு விசிடி வரள னு சொல்லல... இந்த படத்துக்கு இன்னும் வரல... நாளைக்கு கிடைச்சுடும் னு பேசிக்கிறாங்க...

ரசனைக்காரி said...

@ நையாண்டி நைனா

//ஹூம் நான் என்னமோ எதோன்னு நெனச்சி வந்தேன்....//

என்னமோ ஏதோனாச்சும் உங்கள மாதிரி நாலு பேரு படிக்கணும் னா இப்படி தானேங்க தலைப்பு வைக்க வேண்டியதா இருக்கு...

எவனோ ஒருவன் said...

இங்க பத்து தியேட்டர் இருந்தாலும் டிக்கட்டு பிலாக்குலதான் கிடைக்கிது. அங்க ஒரு தியேட்டருக்கே ஆள் இல்லையா?
என்ன கொடும சார் இது?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இப்படி எல்லாம் வழி(லி) இருக்கா!

SurveySan said...

தியேட்டர்ல போய் ஏன் படம் பாக்கக்கூடாதுன்னு ஒரு கொள்கை அமைச்சு அத ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்றோம்.
குறிப்பா, உ.ஒ'க்கு - http://surveysan.blogspot.com/2009/09/blog-post_20.html

Dharan said...

இந்த குப்பையை காசு கொடுத்து பார்க்காதீர்கள்.. படம் தோல்வியைத்தழவ வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் நம் தமிழன் வழக்கம் போல் வாழ்க கோசம் போட்டு கல்லா கட்டிடுவான்..


LINK:

http://www.tubekolly.com/watch/eb3da587e268d663aba1/Unnai-Pol-Oruvan---High-Quality

ரசனைக்காரி said...

@ எவனோ ஒருவன்

அங்க நூத்தி அம்பது ரூபாய் கொடுக்கவும் தயாரா இருக்கிங்க... இங்க முப்பது ரூவா டிச்கேட்டுக்கே ஆள் இல்லைங்க...!!

ரசனைக்காரி said...

@ ஜோதி பாரதி

இத சாக்கா வச்சு பதிவு எழுதுனத தானே கேக்குறீங்க ??!!
வேற வழி(லி) இல்ல பாஸு....

ரசனைக்காரி said...

@ சர்வேசன்

அட நானே ஒண்ணு ரெண்டு படம் தாங்க தியேட்டருல பாப்பேன்... எதோ இந்த படத்த தெரியாம பாக்க போயிட்டேன்...
உங்க பதிவ படிச்சேன்... நல்லது பொறுமையா டிவிடி லயே படம் பாருங்க !!
எங்க பின்னோட்டத்துல ஒருத்தர் லிங்க் கொடுதுட்டாப்புல... போய் படத்த பாருங்க ....
http://www.tubekolly.com/watch/eb3da587e268d663aba1/Unnai-Pol-Oruvan---High-Quality

ரசனைக்காரி said...

@தரன்

//நம் தமிழன் வழக்கம் போல் வாழ்க கோசம் போட்டு கல்லா கட்டிடுவான்..//

சரியா சொன்னீங்க.... கமல் நடிச்துக்காக மட்டுமே பல பேர் இந்த படத்த பாக்கத்தான் செய்யுறாங்க....!!
அட இந்த படம் லைவ் லிங்க் வந்துருச்சா?? நா தான் விவரம் தெரியாத பிள்ளையா இருக்கேனா??!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

Anonymous said...

statistics super

SUBBU said...

கூல் ஸ்பாட் :))

ரசனைக்காரி said...

@shirdi.saidasan@gmail.com

நன்றி முதல் தடவையா பின்னூட்டம் போட்டதுக்கு....

ரசனைக்காரி said...

@subbu

தேங்க்ஸ் பாஸ்....!!!

ச.ஜெ. ரவி said...

### எல்லா ஊருலயும் படம் ரிலீஸ் ஆகி முதல் வாரத்துல கூட்டம் கும்மியடிக்கும்... ஆனா நாங்க போன தியேட்டருல பாருங்க எண்ணி இருவது பேர் தான் இருந்துருப்பாங்க...###
//////////////////////


எந்த ஊருங்க உங்க ஊரு.

எல்லாம் சரி உங்க ரசனை நல்லாதான் இருக்கு

கார்க்கி said...

எந்த ஊரு மேடம்?

அச்சச்சோ நான் கேட்க கூடாது இல்ல.. ஏன்னா

நீ எந்த ஊரு நான் எந்த ஊரு
முகவரி தேவையில்லை..

:)))

ராம்ஜி.யாஹூ said...

nice post. Kamal once again proved that he is a legend.

I doubt even Sivaji could not be able to perform at this level.

when you watch in cd or net, you will get the comfort of seeing in instalments.

எம்.எம்.அப்துல்லா said...

//கணவன்,மனைவி அவங்க குழந்தைங்க ரெண்டு பேர் -4
பென்ஷன் வாங்குற ஒரு தம்பதி -2
மூன்று டி-ஷர்ட் வாலிபர்கள் -3
பத்து வயசுலயே தம்மடிக்கிற பசங்க -4
லாரி டிரைவர்ஸ் -5
அப்புறம் நானும் எங்க அம்மாவும் -2

//

ராஜி உனக்கு கேப்டனோட கட்சியில மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு :)

ரசனைக்காரி said...

@ச.ஜே. ரவி

நன்றிங்க........!!

ரசனைக்காரி said...

@ கார்க்கி
//நீ எந்த ஊரு நான் எந்த ஊரு
முகவரி தேவையில்லை..//

ஸ்ஸ்ஸ்ஸபா... விஜய் ரசிகர் னு தெரியும்ங்க அதுக்காக இப்படி பின்னூட்டம் போட்டுலாம் ப்ரூவ் பண்ண வேணாம் ..

:))

ரசனைக்காரி said...

@ராம்ஜி.யாஹூ

//when you watch in cd or net, you will get the comfort of seeing in instalments.//
very true... tats why people goin for that... :)

ரசனைக்காரி said...

@எம்.எம்.அப்துல்லா

//ராஜி உனக்கு கேப்டனோட கட்சியில மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு :)//

பாஸ் நீங்க வேற யாரையோ நினச்சு சொல்றீங்க னு நினைக்குறேன்...!!!
நா வலையுலகத்துக்கு புதுசு பா !!!!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin