Monday, December 14, 2009

இன்னொசென்ட் ஸ்டெப்ஸ் - அழகான படம்

நெறைய பேருக்கு டான்ஸ் பிடிக்கும்..
எனக்கும் டான்ஸ் பிடிக்கும்... அதுல பல வரைட்டி இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கற டான்ஸ் டைப்ன்னு பாத்தா அது சல்சாவும் டான்கோவும் தான்... ஆடத்தேறியுதோ இல்லையோ அந்த வகை நடனம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு...

ஏன் நம்ம நாட்டுல இல்லாத நடனமான்னு நீங்க கேக்கலாம்.... நான் என்ன நினைக்குரேன்னா நம்ம ஊர் டான்ஸ்லலாம் ஒண்ணு தனியா ஆடுறாங்க இல்லைனா நாலு பேருக்கு மேல சேர்ந்து குளுநடனமா ஆடுராப்புல தான் இருக்கு... அதுனால எனக்கு என்னமோ நம்ம ஊர் டான்ஸ் ல ஒரு பிடிப்பு வரல...

அதுவும் இல்லாம இந்த சல்சாவும் டான்கோவுக்கும் கொடுக்குற மியூசிக்கே ரொம்ப துள்ளலா இருக்குறாப்புல எனக்கு ஒரு பீலிங்... இந்த வகை டான்ஸ் பிடிக்குறதுக்கு இன்னொரு காரணம் இது ரெண்டும் பார்ட்னெர் டான்ஸ்!!!

சரி மேட்டருக்கு வரேன்.... டான்ஸ் பத்தி பல மொழிகள்ல படங்கள் வந்துருக்கு... நான் இப்ப சொல்ல போறது "இன்னொசென்ட் ஸ்டெப்ஸ் " அப்டிங்கற கொரியன் படத்த பத்தி...



இந்த படத்தோட கதைன்னு பாத்தாக்க ஹீரோ ஒரு டான்ஸ் மாஸ்டர்... டான்ஸ்ன்னா என்னனே தெரியாத ஒரு பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குராறு...
அவரு ஹீரோயின் பொண்ணுக்கு சொல்லிக்கொடுக்குற டான்ஸ் சல்சா!! (நான் என்னத்துக்கு மூணு பத்திக்கு இன்ட்ரோ கொடுத்தேன்ன்னு தெரிஞ்சுடுச்சா...!!)

எதோ ஒரு காரணமா வீட்ட விட்டு ஓடி வராங்க நம்ம ஹீரோயின். ஹீரோ அடுத்து வர டான்ஸ் போட்டிக்கு தன்னோட ஜோடியா ஆடுறதுக்காக வர பொண்ண இன்வைட் பண்ண ஏர்போர்ட்டுக்கு வராரு. அப்படி வந்தவரு வேற பொண்ண (அதாவது ஹீரோயின்ன) வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருராறு..

வீட்டுக்கு வந்ததும் தான் தெரியுது தப்பான பொண்ண கூட்டிட்டு வந்துட்டோம்ன்னு... வீட்ட விட்டு வெளிய போ அப்டின்னு அந்த பொண்ண தொரத்திவிட்டுருவாறு.. இன்னொரு நாள் அந்த பொண்ணு எங்கயோ வேலை செஞ்சு கஷ்டபடுரத பாத்து பீல் ஆகி தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு வந்துருவாரு...


"ஒரு டான்ஸ் மாஸ்டர் அப்டினா எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் டான்ஸ் ஆட சொல்லித்தர தெரியனும்" யோசிக்கிற அந்த ஹீரோ அந்த பொண்ணுக்கே டான்ஸ் ஆட சொல்லி தந்து அவகூடவே போட்டில கலந்துகுவோம்ன்னு முடிவு பண்ணி அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிதர ஆரம்பிப்பாரு...

அவரு அந்த பொண்ணுக்கு டான்ஸ் சொல்லிகொடுக்குற காட்சி எல்லாம் அவ்ளோ அழகா இருக்கும்... அவரோட முரட்டுதனத்த பாத்து மொதல்ல அந்த பொண்ணு பயப்படும்.. அப்புறம் அவரே அந்த பொண்ணுக்காக ஸ்டெப்ஸ் லாம் தரைல வரைஞ்சு அதுல ப்ராக்டிஸ் பண்ண சொல்லுவாரு... இப்டியே அந்த பொண்ணு டான்ஸ் கத்துக்குற நேரத்துல அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்துரும்....!!


இங்க தான் ட்விஸ்ட்... படம் ன்னு இருந்தா வில்லன்ன்னு ஒருத்தன் இருந்து தானே ஆகணும்... இங்கயும் வில்லன் உண்டு... அவன் எப்பிடினா நம்ம ஹீரோ கஷ்ட்டப்பட்டு ஒரு புள்ளைக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தா அந்த பிள்ளைய இவரு நோகாம கூட்டிகிட்டு போய் போட்டில கலந்து ஜெயுச்சுருவாறு.... இப்படி ஹீரோ ட்ரைன் பண்ண பல பொண்ணுங்கள கூட்டிட்டு போயிருப்பாரு...

அதே மாதிரி ஹீரோயின்னையும் வில்லன் கூட்டிக்கிட்டு போறாரு இல்லையா அப்பிடின்னு யூட்யுப்ல தேடி படத்த பாத்து தெரிஞ்சுக்கோங்க....

இந்த படத்துல வர ரெண்டு டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ஹீரோவும் ஹீரோயினும் அவங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட ஆடிக்காமிக்குற டான்ஸ் அப்புறம் எண்டு கார்டு போட்டதும் ஹீரோவும் ஹீரோயினும் ஆடுற டான்ஸ்...


அப்புறம் அந்த ஹீரோயின்ன பத்தி சொல்ல மறந்துட்டேனே.... கொரியன் ஹீரோயின்ஸ் லயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த பொண்ணு ( மூன் ஜீனா யங் ) தான்... நல்லா நடிப்பாங்க அப்டின்னு தெரியும்.. அழகா ஆடவும் செய்வாங்க அப்பிடின்னு இந்த படம் பாத்ததும் தான் தெரிஞ்சுகிட்டேன்......




உங்களுக்கு டான்ஸ் பிடிக்கும்னா இந்த படமும் பிடிக்கும்....!!!
கண்டிப்பா பாருங்க....


ஓட்டு போடுங்க மக்களே!!!

27 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

தர்ஷன் said...

//அதே மாதிரி ஹீரோயின்னையும் வில்லன் கூட்டிக்கிட்டு போறாரு இல்லையா அப்பிடின்னு யூட்யுப்ல தேடி படத்த பாத்து தெரிஞ்சுக்கோங்க....//

மாட்டாரு ஏன்னா இவங்க ஹீரோயின் அப்புறம் கிளைமாக்ஸ் எப்பவும் ஹீரோவுக்கு சார்பாதான் முடியனும். என் கருத்து சரியான்னு பிறகு தேடித் படம்பார்த்துக்கிறேன்.

swizram said...

@தர்ஷன்
//மாட்டாரு ஏன்னா இவங்க ஹீரோயின் அப்புறம் கிளைமாக்ஸ் எப்பவும் ஹீரோவுக்கு சார்பாதான் முடியனும். என் கருத்து சரியான்னு பிறகு தேடித் படம்பார்த்துக்கிறேன்.//

இல்லையே இல்லையே... அதான் ட்விஸ்ட்... தேடி படம் பாருங்க !!!

க‌ரிச‌ல்கார‌ன் said...

இன்ட்ர‌ஸ்டிங்

//இங்க தான் ட்விஸ்ட்//... இங்க‌யுமா???????

swizram said...

@கரிசல்காரன்
////இங்க தான் ட்விஸ்ட்//... இங்க‌யுமா???????//

ட்விஸ்ட் இல்லாம படமா.... என்ன கேள்விங்க இது....

கார்க்கிபவா said...

நான் பார்த்த மூனே முக்கால் உலக படங்களில் இது ஒரு கால்ன்னு வச்சுக்கொங்க. நடனத்தின் பெர்ஃபெக்‌ஷன் அனேகமா 100%ன்னு நினைக்கிறேன். நடனம் அவ்ளோ சிறப்பா வந்தத்தற்கு இசையும் ஒரு காரணம்..

தமிழ் படங்களில் புன்னகை மன்னன் தீம் மியூசிக். சல்சாவுக்கு ஏத்த இசை. என்னுடைய கால்ர் ட்யூனும் அதேதான்.. சான்சே இல்ல. நேரம் கிடைக்கும் போது வீட்டில் தனியா ஆடுவேன் . வேறு என்ன செய்ய? :)

☀நான் ஆதவன்☀ said...

//இல்லையே இல்லையே... அதான் ட்விஸ்ட்... தேடி படம் பாருங்க !!//

சுத்தம்... நானும் நம்மூர் சினிமா மாதிரி க்ளைமாக்ஸ் தான் இருக்கும்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப தேடி பார்க்கனுமே. இல்லைன்னா தலை பிச்சுக்கும்.

அட்லீஸ் யூடியூப் லின்ங்காவது கொடுத்திருக்கலாம் :)

swizram said...

@கார்க்கி
//நேரம் கிடைக்கும் போது வீட்டில் தனியா ஆடுவேன் . வேறு என்ன செய்ய? :)//

உங்களுக்கு இன்னுமா ஆள் கிடைக்கல....??
உங்களுக்கு பேபி கிடைச்சுடுச்சு ன்னு ஒரு பதிவ படிச்சதா ஞாபகம்.....!!!

swizram said...

@நான் ஆதவன்

//இல்லைன்னா தலை பிச்சுக்கும். //

இதுக்கெல்லாம் தலைய பிச்சுகுவீன்களா??....
லிங்க் இது தாங்க.... பாத்துக்கோங்க....

http://www.youtube.com/view_play_list?p=FC592956B31662AE&search_query=innocent+steps+part+%22English+Sub%22

சைவகொத்துப்பரோட்டா said...

"மூன் ஜீனா யங்" கொள்ளை அழகு, உங்க விமர்சனம் அருமை.

கார்க்கிபவா said...

//உங்களுக்கு பேபி கிடைச்சுடுச்சு ன்னு ஒரு பதிவ படிச்சதா ஞாபகம்...//

பதிவ படிக்கல.. தலைப்பத்தான் படிச்சிருக்கிங்கன்னு தெரியுது..:)))))

கமலேஷ் said...

first, let me see the picture then i give my comment...

Anonymous said...

இது அந்த காபி ஷாப் மாதிரி ரொமாண்டி கதையா?

Anonymous said...

Coffee Prince னு இருக்கணும். :)

swizram said...

@சைவகொத்துபரோட்டா
//"மூன் ஜீனா யங்" கொள்ளை அழகு, உங்க விமர்சனம் அருமை.//

நன்றி நன்றி நன்றி.....

swizram said...

@கார்க்கி
//பதிவ படிக்கல.. தலைப்பத்தான் படிச்சிருக்கிங்கன்னு தெரியுது..:)))))//

பதிவையும் படிச்சோம்...

swizram said...

@கமேலேஷ்

//first, let me see the picture then i give my comment...//
மொள்ளமா படத்த பாத்துட்டே கமெண்ட் போடுங்க..... நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்...!!

swizram said...

@சின்ன அம்மிணி

//இது அந்த காபி ஷாப் மாதிரி ரொமாண்டி கதையா?//

காபி ஷாப்போ காபி பிரின்ஸோ.... நீங்க சொல்ற படத்த நான் இன்னும் பாக்கலைங்க...
ரோமன்ஸ் படம் அப்டின்னு சொல்றத விட டான்ஸ் படம்ன்னு ன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்ன்னு நான் பீல் பண்றேன்....!!

அண்ணாமலையான் said...

படம் நல்லாத்தான் இருக்கு...

swizram said...

@அண்ணாமலையான்

//படம் நல்லாத்தான் இருக்கு...//

பாத்துட்டீங்களா......??
ரொம்ப சந்தோசம்...

அண்ணாமலையான் said...

பின்னே நீங்க சொல்லி பாக்காம இருப்பேனா?

இளைய கவி said...

பகிர்தலுக்கு மிக்க நன்றி

swizram said...

@அண்ணாமலையான்
//பின்னே நீங்க சொல்லி பாக்காம இருப்பேனா?//

ஸ்ஸ்ஸப்பாஆஆஆ .... முடியல ....!!!

Anonymous said...

Coffee Prince ஒரு கொரிய டீவீ சீரியல். நல்லா இருக்கும். யூ ட்யூப்ல கிடைக்கும். பாருங்க

swizram said...

@இளையகவி
//பகிர்தலுக்கு மிக்க நன்றி//

பின்னூட்டத்துக்கும் நன்றி ...

swizram said...

@சின்ன அம்மிணி
//Coffee Prince ஒரு கொரிய டீவீ சீரியல். நல்லா இருக்கும். யூ ட்யூப்ல கிடைக்கும். பாருங்க//

பாத்துட்டா போச்சு... பகிர்தலுக்கு நன்றி தோழி....!!!

அன்புடன் மணிகண்டன் said...

டான்ஸ் புடிக்குதோ இல்லையோ.. எனக்கு அந்த ஹீரோயின ரொம்ப புடிச்சிருக்கு..
(அப்பாடி.. வந்ததுக்கு ஒரு பின்னூட்டம் போட்டாச்சு...)

swizram said...

@அன்புடன் மணிகண்டன்
//டான்ஸ் புடிக்குதோ இல்லையோ.. எனக்கு அந்த ஹீரோயின ரொம்ப புடிச்சிருக்கு..
(அப்பாடி.. வந்ததுக்கு ஒரு பின்னூட்டம் போட்டாச்சு...)//

இதே வேலையா உங்களுக்கு??? எனிவே பின்னூட்டத்துக்கு நன்றி தல...!!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location