Saturday, August 15, 2009

நகரத்தார் சங்க பாதயாத்திரை--குருந்தமலை முருகன்

வணக்கம்....
கோவை பதிவர்கள் யாரவது குருந்தமலை முருகன பத்தி எழுதிருபங்க னு நினச்சேன்... இன்னும் யாரும் எழுதலைங்க...

நான் எனக்கு தெரிஞ்சத சொல்லிட்டுபோரேன்...

கோவை நகரத்தார் சங்கத்துல இருந்து வருஷாவருஷம் நெறைய பேர் குருந்தமலைக்கு பாதயாத்திரை போறாங்க... சுமார் ஒரு 35km நடைபயணம்...

இந்தவருஷம் 17 ஆம் ஆண்டு பாதயாத்திரை... இத ஒட்டி ஒரு புக் வெளியிட்டாங்க.... எனக்கு இது தாங்க முதல் வருஷம் ..

இந்த தரவை ௨௮ பேர் காவடி எடுத்தாங்க...

14.8.09 3.30 மணி அளவுல வேல் பூஜை ல ஆரம்பிச்சு நாலரை மணிக்கு லாம் எல்லாரும் நடக்கஆரம்பிச்சு ....


வேல் பூஜை
படங்கள்












8 மணிக்கு பெரியநாயக்கன் பாளையம் லயன்ஸ் கிளப் ல எல்லாருக்கும் பலகாரம் கொடுத்து , சாமி ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்துச்சு...

இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறபிச்சவங்க விப்ரோ வீரப்பன் அவர்களும் அவங்க துணைவியாரும் அப்பறம் சிடிஎஸ் சிதம்பரம்...

ஊஞ்சல் சேவை





ஊஞ்சல் சேவைய முடிச்சுட்டு நடக்க ஆரம்பிச்ச நாங்க 15 ஆட தேதி காலைல 7 மணிக்கு குருந்தமலை சந்நிதானத்த சேந்தாச்சு... ரொம்ப திருப்த்தியா சாமி தரிசனம் முடிச்சு ஊருக்கு வந்துடோம்...


குருந்தமலை முருகன்


காவடிகள்


நாங்க சீக்கிரமாவே கிளம்பிடனால மதியம் நடக்க இருந்த அபிஷேகத்தையும் உரையையும் மிஸ் பண்ணிடோம் னு ஒரு சின்ன வருத்தம் இருக்குங்க !!

2 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

உண்மைத்தமிழன் said...

எங்கே இருக்கிறது இந்த குருந்தமலை..?

கோவைக்கு மிக அருகிலா..?

நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த முறை கோவைப் பகுதிக்கு போகும்போது அப்பனை தரிசிக்க வேண்டியதுதான்..!

நன்றி கத்துக்குட்டி..!

swizram said...

கோவைக்கு அருகில் தாங்க... காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் தான்...

காரமடை இல் இருந்து 5km தொலைவு இருக்கும் ...

பக்கத்தை படித்ததற்கு நன்றி உண்மைத் தமிழரே!!!

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location