Saturday, September 19, 2009

உங்களுக்கு சில பொதுவான விஷயங்கள்....

1.உங்க கிட்ட எதிர்பாக்குரத விட அதிகமா பண்ணுங்க... சந்தோஷமா பண்ணுங்க.

2.உங்களுக்கு பேச பிடிச்சுருக்கவங்கள கல்யாணம் பண்ணிகோங்க. உங்களுக்கு வயசானப்புறம் அந்த பேச்சு தான் உங்களுக்கு தெம்ப கொடுக்கும்.

3.கேக்குறது எல்லாத்தையும் நம்பாதிங்க, இருக்கிறது எல்லாத்தையும் செலவளிக்காதிங்க, நினைக்குறப்பலாம் தூங்காதிங்க.

4."ஐ லவ் யூ" சொன்னா உணர்ந்து சொல்லுங்க.

5."ஐ யம் சாரி" னு சொல்றப்ப கண்ண பாத்து சொல்லுங்க.

6.கல்யாணத்துக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடியே உங்க பார்ட்னெர் கூட பேசுங்க.

7.கண்டதும் காதல் ல நம்பிக்கை வைங்க.

8.யாரு கனவையும் பாத்து சிரிக்காதிங்க. ஏன்னா கனவு காணதவங்க எதையும் பண்ண மாட்டாங்க.

9.முழுசா விரும்பி காதலிங்க. வாழ்கைய முழுசா வாழ அது தான் பெஸ்ட்.

10.யாரையும் அவங்க உறவினர்கள வச்சு ஜட்ஜ் பண்ணாதிங்க.

11.பொதுவா பேசுங்க ஆனா சீக்கிரமா சிந்தியுங்கள்.

12.உங்களுக்கு பதில் சொல்ல பிடிக்காத கேள்விய யாரவது கேட்டா
"நீங்க எதுக்கு அத தெரிஞ்சுக்க பிரியப்படுறிங்க?" னு சிரிப்பு மாறாம கேளுங்க.

13.யாராச்சும் தும்மினாலோ இருமினாலோ " bless you" னு சொல்லுங்க.

14.தோற்று போகும்போது தோல்வி கத்து கொடுத்த பாடத்த மறந்துடாதிங்க.

16.எப்பவும் மூன்று விஷயங்கள் மனசுல வச்சுகோங்க
சுய மரியாதை
பிறருக்கான மரியாதை
தன் செயலுக்கான பொறுப்பு.

17.சின்ன விஷயங்கள் நட்பை பாதிக்காம பாத்துகோங்க.

18.எப்பயாச்சும் நீங்க தப்பு பண்ணிட்டிங்க னு தோன்றினால் உடனே அத சரி செய்வதற்கான வழிகளில் ஈடுபடுங்க.

19.தொலைபேசியில் பேசும்போது சிரிங்க. உங்கள் சிரிப்பு மறுமுனையில் இருப்பவருக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

20.தனியாவும் கொஞ்சம் நேரம் இருந்து பாருங்க.


என்னடா பொதுவான விஷயங்கள் னு சொல்லிட்டு இப்படி கருத்தா சொல்லிட்டேனே னு பாக்குறிங்களா.... என்ன பண்றது தலைப்புக்கும் பதிவுக்கும் எப்படி யோசிச்சாலும் சம்பந்தம் இருக்கவே மாட்டேங்குது என்னோட பதிவுகளுக்கு மட்டும்!!!


ஹலோ.. யாரவது நான் சொல்லாம விட்ட 15 வது பாயின்ட்ட கவனிச்சிங்களா ??
இந்த பதிவ படிச்சதே பெரிய விஷயம்னு சொல்லவரிங்களா... ரைட்டு விடுங்க...!!

12 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை!

இப்ப எழுதறத்துக்கு நேரம் எல்லாம் கிடைக்குதா?

எழுத நேரம் கிடைக்கும் போது எழுதித் தள்ளுங்கள்!

லோகு said...

ம்ம்ம்ம்... கலக்கல்... நல்ல விஷயங்கள். சிலதை ஏற்கனவே செய்துட்டுதான் இருக்கேன்..

பாலா said...

15. அதே போல இத மாதிரி மொக்கை பதிவுலாம் போடாதீங்க (ஹிஹிஹி )

ஜோசப் பால்ராஜ் said...

15) உங்கள மாதிரி புதுப் பொண்ணு எல்லாம் கல்யாணம் முடிஞ்சதுல இருந்து ஒரு 3 மாசத்துக்காச்சும் பதிவெழுதுறது, பின்னூட்டம் இடுறது போன்ற வேலைகளை செய்யாதிங்க.

பிரியமுடன்...வசந்த் said...

//எப்பவும் மூன்று விஷயங்கள் மனசுல வச்சுகோங்க
சுய மரியாதை
பிறருக்கான மரியாதை
தன் செயலுக்கான பொறுப்பு.//

கரீக்டா சொன்னீக தம்பி

ஜீவன் said...

///10.யாரையும் அவங்க உறவினர்கள வச்சு ஜட்ஜ் பண்ணாதிங்க.//


நல்ல பாயின்ட் !

//19.தொலைபேசியில் பேசும்போது சிரிங்க. உங்கள் சிரிப்பு மறுமுனையில் இருப்பவருக்கு உற்சாகத்தை கொடுக்கும்.///

எதாவது துக்கமான விஷயம் சொன்னா ??? அப்போவும் சிரிக்கணுமா ???

அன்புடன் அருணா said...

பூஙகொத்து!

ரசனைக்காரி said...

@ ஜோதிபாரதி

நன்றி...
நீங்க என்னை வேறயாரோ னு நினச்சுட்டு இருக்கீங்க னு நினைக்குறேன்...

@லோகு

ம்ம்ம்ம்... அப்டியே எல்லாத்தயும் செய்யுங்க...

@பாலா

15 வது பாயிண்ட் போட்டதுக்கு நன்றி :)

@ ஜோசப்

உங்க பாயின்ட்ட நா மைன்ட் ல வச்சுக்குறேன்.....

@வசந்த்

என்னங்க தம்பி னு சொல்லிடீங்க.....??!! ப்ரொபைல ஒழுங்கா பாக்கலையோ?!!!

@ஜீவன்

யாரவது இப்படி கேப்பாங்க னு நினச்சேன், நீங்க கேட்டுட்டீங்க... நான் சொன்னது பொதுவா பேசும்போது மத்தபடி சொல்ல போற செய்திக்கு ஏத்தமாதிரி ஏத்தஇறக்கதோட பேசுங்க பா...

@அருணா

நன்றி பூங்கொத்துக்கு...!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ரசனைக்காரி said...
@ ஜோதிபாரதி

நன்றி...
நீங்க என்னை வேறயாரோ னு நினச்சுட்டு இருக்கீங்க னு நினைக்குறேன்...
//
அது சரி!

வலைப்பூவின் நிறத்தை கொஞ்சம் பிங் கலர்ல மாத்திட்டா எனக்கு நீங்க யாருன்னு தெரியாதா?


:)))

ரசனைக்காரி said...

இது என்னடா வம்பாபோச்சு.... நீங்க யாருங்க???

ரங்கன் said...

தும்மினா Bless You!!

இது நல்லா இருக்கே!!

ரசனைக்காரி said...

அப்ப மத்ததெல்லாம் நல்ல இல்லைனா சொல்றீங்க...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.....

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin