
"என் எடத்துல இருந்து பாத்தாதான் உனக்கு நான் ஏன் இப்டி சொல்றேன் னு தெரியும் " னு பல பேர் பல சந்தர்பத்துல சொல்லி நாம கேட்டுருபோம்... அப்படி ஒரு கருத்த வச்சு 2003 ரிலீஸ் ஆனா படம் தான் "Freaky Friday" ..

லிண்டசே லோகன் எல்லாரையும் போல அம்மா போடற கண்டிஷின் கு அடங்கி போகம, தம்பி கூட எப்ப பாத்தாலும் சண்ட போட்ற வழக்கமான டீனஜெர். தன்னோட அம்மா ரெண்டாவது கல்யாணம் பண்ணிகரத ஏத்துகுற மனநிலை இவளுக்கு இல்ல. ஒரு சைனீஸ் உணவு விடுதியில் சாப்டும்போது அம்மாவும் பொண்ணும் சண்ட போட்டுக்குறாங்க. இதபாத்த விடுதில இருக்க ஒரு சைனா கார அம்மா அவங்க ரெண்டு பேருக்கும் fortune குக்கி கொடுத்துடுறாங்க. அது தெரியாம அத சாப்டுற அம்மாவும் பொண்ணும் அவங்க மட்டும் ஒரு நில நடுக்கத்தை உணராங்க.

மறுநாள் காலைல எழுந்துரிகுற டெஸ் (அதான் அம்மா ) தான் தன்னோட பொண்ணு உடம்புல இருக்கோம் னு தெரிஞ்சு அதிர்ச்சி ஆகுறாங்க. அதே மாதிரி பொண்ணும் அம்மா உடம்புல இருக்கத நினச்சு அதிர்ச்சி அடையுறாங்க. அந்த உணவு விடுதில தான் எதோ நடந்துருக்கணும் னு முடிவு பண்ணி அங்க போய் கேக்கும்போது அங்க உள்ளவங்க சொல்றாங்க , நீங்க சாப்பிட்ட குக்கி ல போட்டுருந்த fortune நிறைவேருனா தான் அவங்களுக்கு அவங்க உடம்பு திரும்ப கிடைக்கும் னு...

அவங்க இப்டி மாறுன அன்னிக்கு அவங்க அம்மாவுக்கு இரண்டாவது கல்யாணம், பொண்ணுக்கோ அவ வாழ்கை லட்சியமா இருக்க மியூசிக் காம்படிஷின்.. ரெண்டு பேரும் மத்தவங்களோட வேலைய எப்டி பண்றாங்க ங்கறத ரொம்ப நகைச்சுவையா சொல்லிருபாங்க...

அந்த வெள்ளிகிழமைல அவங்க பண்ற கூத்து தான் மிச்ச படம்...
பாத்து சிரிச்சுகோங்க....!!!
இந்த படம் பாக்க
இங்க கிளிக்குங்கோ
7 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
வழக்கம் போல பார்க்க தூண்டும் விமர்சனம்.. அந்த போட்டோல இருக்கற பொண்ணு நல்லா இருக்கு.. பார்த்துடலாம்..
யூ டியூபில் இருக்கா ராம்??
உண்மையிலயே எனக்கும் இந்த படம் பார்க்க ஆவலாக உள்ளது.
இந்த படத்தை பார்த்து தான் " It's a Boy Girl Thing" படம் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறன். நீங்கள் "It's a Boy Girl Thing" படத்தை பார்த்தீர்களா?
மிகவும் நகைச்சுவை உள்ள படம்.
யூ டியூபில் இருக்கு லோகு... போய் தேடி தான் பாருங்களேன்...
சுலபமா எல்லா ஆங்கில படமும் ப்ரீயா பாக்க இந்த பக்கத்துக்கு போங்க...
www.watch-movies-links.net
இந்த படம் மட்டும் பாக்க பதிவுல லிங்க் கொடுத்துட்டேன் பா !!!
முதல் தடவையா பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி செந்தில்குமார்..
It's a boy girl thing மட்டும் இல்ல Hot Chick ங்கற படமும் இந்த கான்செப்ட் ல தான் இருக்கும்... இத பாத்து எடுத்தாங்க னு சொல்றதுக்கு இல்ல... இந்த கதையே மொதல்ல புத்தகமா தான் வந்தது... வால்ட் டிஸ்னீ ல இத ரெண்டு முறை படமாவும் , ஒரு முறை தொலைகாட்சி தொடராவும் எடுத்துருக்காங்க... முதல் முறை படமா எடுத்தத நான் இன்னும் பாக்கல... டவுன்லோட் லிங்க் கிடைக்குமா னு தேடிட்டு இருக்கேன்....
மத்த ரெண்டு படத்த விட இந்த படம் எனக்கு ரொம்ப பிடிசுருந்ததால் இந்த படத்த பத்தி மட்டும் எழுதிருக்கேன்...
Hot Chick பாத்துருக்கேன். நல்ல காமெடி
முதல் முறையா பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி சின்ன அம்மிணி....!!!
Hot Chick நகைச்சுவையான படம் தான்... இதையும் கண்டிப்பா பாருங்க... உங்களுக்கும் பிடிக்கும் னு நினைக்கிறேன்.
பட விமர்சனம் அருமை. . It's a boy girl thing படம் போலவே. ..
http://subashsstory.blogspot.in/2015/04/it-boy-girl-thing.html?m=1
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க