Friday, September 18, 2009

சின்ன கற்பனை கதை....


நியூட்டன் கண்ணாமூச்சி ஆடினா என்ன பண்ணிருப்பாரு..

ஒரு நாள் எல்லா சைண்டிஸ்டும் கண்ணாமூச்சி விளையாடலாம் னு முடிவு பண்ணாங்க.

அவங்க நாக்க மூக்க போட்டு பாத்ததுல அயின்ஸ்டீன் தான் முதல்ல கண்ண கட்டணும். அவரு கண்ண மூடிட்டு 100 வரைக்கும் எண்ண ஆரம்பிச்சாரு.

நியூட்டனா தவற , எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கமா போய் ஒளிஞ்சுகிட்டாங்க.

நியூட்டன் மட்டும் ஒரு மீட்டர் அளவுக்கு தன்ன சுத்தி சதுரம் வரைஞ்சுட்டு அயின்ஸ்டீன் க்கு முன்னாடியே நின்னுட்டாரு.

1,2,3....97,98,99,100 னு எண்ணி முடிச்ச கண்ண தொறந்து பாத்த அயின்ஸ்டீன், எதுதாப்புலயே நியூட்டன் நிக்கறத பாத்துட்டு "நியூட்டன் அவுட் அவுட்" னு குஷியாகிட்டாரு.

அசராம நின்ன நியூட்டன் " நா அவுட் இல்ல... நா நியூட்டனே இல்ல " னு சாதிச்சாறு.

இத பாத்து குழப்பமான எல்லா சைண்டிஸ்டும் இவரு எண்ண சொல்லவராறு னு பாக்க வந்தாங்க.

அப்ப நியூட்டன் சொன்னராம் " நா ஒரு மீட்டர் சதுர ஏரியா இருக்கேன்..... அதாவது நியூட்டன் பெர் மீட்டர் ஸ்கொயர்...

நியூட்டன் பெர் மீட்டர் ஸ்கொயர் = ஒன் பாஸ்கல் , சோ நான் பாஸ்கல் , இப்ப சொல்லுங்க பாஸ்கல் தானே அவுட் ??!!"

எல்லா சைண்டிஸ்டும் இப்டி தான் உங்கள மாதிரியே தலைல கைய வச்சுட்டு உக்கந்துட்டாங்க!!!

ஹா... வாழ்க்கைல இது மாதிரியே எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க.... நம்ம சிரிப்பு தான் மத்தவங்க மனசுல நம்ம அடையாளமா இருக்கும்...( இது சொந்த தத்துவம் பா ... அட நம்புங்க !!)

19 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

ரகுநாதன் said...

பேருக்கேத்த மாதிரியே ரசனைக்காரிதான் நீங்க...:)
இந்த பின்னூட்டம் போட்டது நானே இல்ல இது நியூட்டன் பெர் பிளாக்ஸ் மீட்டர் ஸ்கொயர்-- அதாவது இது வேற பதிவர்.....எப்......பூடி.

பிரியமுடன்...வசந்த் said...

//அசராம நின்ன நியூட்டன் " நா அவுட் இல்ல... நா நியூட்டனே இல்ல " னு சாதிச்சாறு.//

ha ha haa......

Kamal said...

ஹா ஹா ஹா....நெஜமாவே ரசிச்சு சிரிச்சேன் :)))

ரசனைக்காரி said...

@ ரகுநாதன்
முதல் முறையா பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி ரகு...

நீங்க என்னங்க என் பதிவுல போட்டதயே மாதி பின்னூட்டமா போடுறிங்க....??!!

ரசனைக்காரி said...

@ வசந்த்

நல்லா சிரிச்சா சந்தோசம் தான்.....

ரசனைக்காரி said...

@கமல்

ரசனை தான் பாஸ் வாழ்க்கைக்கு முக்கியம்.....!!

லோகு said...

பேர் மாத்துனதுமே கூட்டம் குவியுது போல...

கதை அபாரம். எப்படி இப்படி எல்லாம் கற்பனை வருது... கலக்கல்..


அப்புறம் இன்னொரு ஆலோசனை.. ஒரே நாள் ல தொடர்ந்து 2,3 போஸ்ட் போடாதே.. ஒரு நாளைக்கு ஒன்னு அப்படின்னு போட்டாத்தான், நிறைய கூட்டம் வரும்..

ரசனைக்காரி said...

@லோகு

எல்லாம் உங்க ஆலோசனை குரு சார் ... !!!
நீங்க சொன்னா சரி தான்.... இனிமே ஒரு ஒரு பதிவா போட்டுடுறேன்...

க.பாலாஜி said...

ஹா..ஹா... சையின்டிஸ்ட்லாம் விளையாண்டா இப்டிதான் இருக்கும்.

//ஹ ஹ ஹா... வாழ்க்கைல இது மாதிரியே எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க.... நம்ம சிரிப்பு தான் மத்தவங்க மனசுல நம்ம அடையாளமா இருக்கும்...( இது சொந்த தத்துவம் பா ... அட நம்புங்க !!)//

கடைசியாவும் ஒரு ஜோக்....

ரசனைக்காரி said...

@ க.பாலாஜி

முதல் முறையா பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி சகா...

என் கருத்த ஜோக் னு சொல்லி என்னை இப்டி காமெடி பீஸ் ஆக்கிட்டிங்களே பாஸ்... !!!

நீங்ககள் என்ன சொல்லுறீங்கள் என்றே புரியவில்லை. மன்னிக்கவும். நான் யாழப்பாணம் உங்கள் தமிழ் மொழிநடை புரியவில்லை. காரணம் ஆங்க்கிலம் தமிழாக மாறி மாறி வந்திருக்கிறது. எப்படியோ வாழ்த்துக்கள். said...

நீங்ககள் என்ன சொல்லுறீங்கள் என்றே புரியவில்லை. மன்னிக்கவும். நான் யாழப்பாணம் உங்கள் தமிழ் மொழிநடை புரியவில்லை. காரணம் ஆங்க்கிலம் தமிழாக மாறி மாறி வந்திருக்கிறது. எப்படியோ வாழ்த்துக்கள்.

சுபா said...

சரியான கடி.. நீங்கள் எங்கள் குழுமத்தில் இணையுங்களேன்.

சுபா said...

சொல்ல மறந்தேன்.. குழும முகவரி.. tamil2friends@googlegroups.com

vasu said...

VERY NICE.

ரசனைக்காரி said...

@ சுபா

குழுமத்துள்ள இனஞ்சுட்டா போச்சு...
அதுக்கு என்னங்க பண்ணனும்... நீங்க கொடுத்துருக்க முகவரிக்கு மெயில் அனுப்புமா??!!

ரசனைக்காரி said...

@நீங்ககள் என்ன சொல்லுறீங்கள் என்றே புரியவில்லை. மன்னிக்கவும். நான் யாழப்பாணம் உங்கள் தமிழ் மொழிநடை புரியவில்லை. காரணம் ஆங்க்கிலம் தமிழாக மாறி மாறி வந்திருக்கிறது. எப்படியோ வாழ்த்துக்கள்.

மன்னிக்க வேண்டும் . எனது தமிழ் நடை முறையானது அல்ல தான். பேச்சு வழக்கில் எழுதுவதால் உங்களுக்கு புரியாமல் இருந்திருக்கலாம். நல்ல தமிழில் எழுத முயற்சிக்கிறேன்.

ரசனைக்காரி said...

Thanks Vasu....

சுபா said...

இங்க போங்க..

http://groups-beta.google.com/group/Tamil2Friends

நிறைய மொக்க சாமிங்க குழுவில இருக்காங்க.. ஜாக்கிரதை :)

Aishu said...

very interesting.. i enjoyed reading this.. :)

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin