நீங்க எப்பவாச்சும் யோசிச்சு பாத்துருக்கிங்களா கார்டூன் கதாப்பாத்திரம் லாம் நிகழ்காலத்துக்கு வந்தா எப்டி இருக்கும் னு?? அப்டி ஒரு கார்டூன் ஹீரோயின் உலகத்துக்கு வந்து நிஜ கதாநாயகன கை பிடிக்கிற கதை தான் "Enchanted".
ஜிசேல் ( Amy Adams ) கார்ட்டூன் உலகமான ஆண்டலேசியாவுள்ள வாழுகிற பொண்ணு. அது ஒரு டிபிகல் பாண்டஸி உலகம். அங்க மிருகங்கள் பேசும், எல்லாத்துக்கும் இசை இருக்கும். அங்க வாழுற ஜிசேல் தன்னோட காதலன் எப்டிலாம் இருக்கனும் னு தன்னோட நண்பர்களான பிப் ங்கற சிப்மங் கிட்டயும் மத்த காட்டு விலங்குகள் கிட்டயும் பாட்டுலயே சொல்லுரா... அந்த பாட்ட கேட்டு மயங்குன அந்த நாட்டோட இளவரசன் அவள கல்யாணம் பண்ணிக்க விருப்ப படுறான்... இத பிடிக்காத இளவரசனோட சித்தி(வில்லி) ஜிசேல் ல ஒரு மாஜிக்கல் போர்ட் ல தந்திரமா தள்ளி விட்டுடுறாங்க...
மாஜிக்கல் போர்ட் ல விழுகிற ஜிசேல் நியூ யார்க் நகர டைம்ஸ் சதுரம் வழியா நிகழ்காலத்துக்கு வராங்க. சில பல சந்தர்பத்துக்கு அப்புறம் ஜிசேல் ராபர்ட் ங்கற ஒரு லாயர மீட் பண்ணுது. அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணனும் னு நினைக்கிற அந்த வக்கீல் அவள தான் வீட்டுல தங்க அனுமதிக்கிராறு. ஆனா காட்டுல இருக்க மாதிரியே இங்கயும் பாட்டு பாடி எலி,புறா னு லாம் வீட்டுக்குள்ள வர வைக்குற ஜிசேல் ல பாத்து கடுப்பாகுராறு.
இதுக்கு நடுவில கார்டூன் உலகத்துல இருந்து ஜிசேல் ல தேடி அந்த இளவரசனும் பிப் உம் நிகழ்காலத்துக்கு வராங்க. இத தெரிஞ்சுகிட்டு அவனோட சித்தியும் ஜிசேல் ல கொல்ல ஆள் அனுப்புறாங்க.
ஜிசேல் என்ன ஆனா, அவ அந்த இளவரசனோட சேர்ந்தாளா இல்ல வில்லி கிட்ட மாட்டிகிட்டு கஷ்டபட்டாலா,நிகழ்காலதுள்ளயே தங்கினாலா இல்ல கார்டூன் உலகத்துக்குபோனாளா னு லாம் தெரிஞ்சுக்க படத்த பாருங்க.
இது ஒரு ரொமான்ஸ், காமெடி, ம்யூசிகல் படம்.
பொழுதுபோக்குக்கு படம் பாக்குறவங்களுக்கு இந்த படம் என் பரிந்துரை. இந்த படம் பாக்கும்போது ஒரு குழந்தை மாதிரி அட்லீஸ்ட் நாலு சீன்லயாச்சும் கண்டிப்பா பீல் பண்ணுவிங்க.
படத்துக்கான லிங்க்
2 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
நல்லா ரசித்துப் பாரத்திருக்கிறீர்கள். எங்களையும் தூண்டுகிறீர்கள்.
எதோ நம்மளால முடிஞ்சது...
முதல் முறையா பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி டாக்டர் சார்.....
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க