நீண்ட தூரம் ரயில் பயணம் பிடிக்காதுன்னு சொல்றவங்க யாராச்சும் இருக்காங்களா என்ன...??!!
எனக்கு ரயில் பயணம் ரொம்ப பிடிக்கும்.. சின்ன பிள்ளையா இருக்கும்போது குடும்பத்தோட எங்க போனாலும் எங்க அப்பா விரும்புறது ரயில்ல போகத்தான்.... அப்டி போன நிறையா பயணங்கள் இன்னும் நினைவுகள்ள ரொம்ப பசுமையா இருக்கு....
தெரிஞ்சவங்க தெரியாதவங்க னு லாம் வித்யாசம் இல்லாம சேர்ந்து போற 5 மணி நேரமோ 6 மணி நேரமோ எல்லாரும் சிரிச்சு பேசிட்டு போற அழகே தனி..
எனக்கு ரயில்ல போகும்போது நிறைய நண்பர்கள் கிடச்சுருக்கங்க.. என் வயசு நண்பர்கள் னு சொல்றத விட எல்லா வயசுலயும் நண்பர்கள் கிடச்சுருக்காங்க னு சொல்றது தான் சரியா இருக்கும்..
சுமார் பத்து வருசத்துக்கு முன்னாடி இப்டி ரயில் பயணத்துல நண்பரா கிடச்சவங்க ரவி அண்ணா மற்றும் அருண் அண்ணா... ரெண்டு பேரும் இப்ப என்ன பண்றாங்க னு தெரியாது.. அவங்க இன்னும் மனசுல இருக்கதுக்கு முக்கியமான காரணம் அவங்க ரெண்டு பேரும் அவ்ளோ நல்லா பேசுனாங்க.. எவ்ளோ கதை சொன்னாங்க.. பொதுவா வளந்துட்டாலே குழந்தைதனத்த நாம எல்லாரும் மறந்துடுவோம்.. ஒரு குழந்தைகிட்ட எப்டி பேசனும் னு கூட பலருக்கு தெரியாது... அவங்கள பாத்துதான் குழந்தைத்தனம் வாழ்கைல ரொம்ப முக்கியம் னு புரிஞ்சது... ( இப்ப எதுக்கு இத்தன பில்ட் அப் னு நீங்க கேக்குறது தெரியுது)
போன வாரத்துல சேலத்துல இருந்து சென்னை போனேன்.. ரயில்ல தான்.. மக்கள் ரொம்ப மாறிட்டாங்க... அதிக வேலை களைப்பா என்ன னு தெரியல நான் ஏறுன கம்பார்ட்மென்டுள்ள எல்லாரும் ரயில் பொறப்பட்டு கொஞ்ச நேரத்துலயே தூங்க ஆரம்பிச்சுட்டாங்க.. அப்டி தூங்காத சிலரும் காதுல ஒரு மொபைலயோ எம்பி3 பிளேயரயோ மாட்டிகிட்டு அவங்க இஷ்டப்பட்ட பாட்டுகள கேக்க ஆரம்பிச்சுடாங்க... இன்னும் கொஞ்சம் டீன்ஸ் மெசேஜ் மற்றும் கால்ஸ் ( அது கடலையா னு கடவுளுக்கு தான் தெரியும் ) லா பிசியா இருந்தாங்க..
எனக்கு ரொம்ப போர் அடிச்சு கொஞ்சம் நேரம் வேடிக்க பாத்தேன்... பஸ் ல போறத விட ரயில்ல போறதுல்ல சின்ன சந்தோசம் என்ன னா போற வழி எல்லாம் இயற்கை காட்சிகளா பாத்துட்டு போகலாம்..
வேடிக்க பாத்துட்டே இருக்கும்போது தான் ஒரு எண்ணம் வந்துச்சு இப்டி வெட்டியா போறதுக்கு பேசாம எழுதுறதுக்கு எதையாச்சும் யோசிக்கலாம் னு நினைக்க தான் ங்க செஞ்சேன் எங்கேர்ந்து தான் தூக்கம் வந்துச்சோ அப்டியே தூங்கிட்டேன் :( ..
முழிச்சு பாக்குறப்ப ரயில் எங்க போகுது னே தெரியல.. பக்கத்து சீட்ல இருந்த அங்கிள் சொன்னாங்க ஜோலார்பேட்டை தாண்டிவந்துருச்சு னு.... ஜன்னல்ல பாத்த அரை கிலோமீட்டர் தள்ளி இருக்குற வீடு கூட பளிச்சு னு தெரியுது... வாஸ்து கலராம்... அப்பா சாமி கண்ணு போச்சு போங்க...
கண்ட கலர அடிச்சது கூட பரவால அதுக்கு பார்டெர் ப்ரைட் கலர் ல அடிச்சு (அதாவது ஆரஞ்சு கலர் கு கிளிபச்ச பார்டெர், வயலெட் கலர் கு பஞ்சு மிட்டாய் கலர் பார்டெர் னு ) ரொம்ப கொடுமையா பெயிண்ட் அடிச்சுருக்காங்க... அழகா வீட கட்டி இப்டி ஏன் தான் பெயிண்ட் அடிக்கிறாங்களோ ?!!
அப்டி இப்படி னு ஒரு வழியா சென்னை வந்து சேந்துட்டேன்.. கடைசிவர எத பத்தி எழுதுறது னு யோசிக்கவே இல்ல போங்க ....!!!
இத படிக்கறவங்களுக்கு ஒன்னு புரிஞ்சுருக்கும்... இவ என்ன சொல்ல வரானே புரியல தானே உங்களுக்கு... எனக்கே அது புரியலங்க... எதோ எழுதனும் னு கஷ்டப்பட்டு இவ்ளோ டைப் பண்ணிட்டேன், வெட்டியா ட்ராப்ட் ல போட்டு வைக்க மனசு வரல அதன் பப்ளிஷ் பண்ணிட்டேன்... மன்னிச்சுக்கங்க எசமான் மன்னிச்சுக்குங்க....
அது என்னமோ போங்க நா சொந்தமா எது எழுதுனாலும் அது எனக்கே புரிய மாட்டேங்குது !!!
9 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:
///இன்னும் கொஞ்சம் டீன்ஸ் மெசேஜ் மற்றும் கால்ஸ் ( அது கடலையா னு கடவுளுக்கு தான் தெரியும் //
ஏன் நீ கடவுள எல்லாம் இழுக்கற...நமக்கே தெரியும் லா :)
///கண்ட கலர அடிச்சது கூட பரவால அதுக்கு பார்டெர் ப்ரைட் கலர் ல அடிச்சு (அதாவது ஆரஞ்சு கலர் கு கிளிபச்ச பார்டெர், வயலெட் கலர் கு பஞ்சு மிட்டாய் கலர் பார்டெர் னு ) ரொம்ப கொடுமையா பெயிண்ட் அடிச்சுருக்காங்க... அழகா வீட கட்டி இப்டி ஏன் தான் பெயிண்ட் அடிக்கிறாங்களோ ?!!
////
நான் நெனச்சேன் நீ சொல்ட்ட :)
" என்ன எழுதறோம்ங்கறது முக்கியம் இல்ல.. எப்படி எழுதறோம்ங்கறது தான் முக்கியம்.. " இது யார் சொன்னது தெரியுமா.. நான் தான்..
விஷயமே இல்லாம கோர்வையா இவ்ளோ எழுதறதே பெரிய விஷயம்.. வருங்காலத்துல பின் நவீனத்துவ எழுத்தாளரா வர்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு..
எனக்கு வேலை வெட்டியே இல்ல.. என்ன எழுதுனாலும் கம்மென்ட் போடுவேன்.. தைரியமா எழுதலாம்..
உன்ன மாதிரி நண்பர்கள நம்பித்தான் அத பப்ளிஷே பண்ணேன் லோகு ...
//பின் நவீனத்துவ எழுத்தாளரா வர்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு..//
அப்டி னு சொல்லிருகிங்கலே... அப்டி னா என்ன ???!!!
//அது என்னமோ போங்க நா சொந்தமா எது எழுதுனாலும் அது எனக்கே புரிய மாட்டேங்குது !!!//
சூப்பரு!!!!
பின் நவீனத்துவ எழுத்தாளரா வர்றதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு..//
//அப்டி னு சொல்லிருகிங்கலே... அப்டி னா என்ன ???!!!//
இதுமாதிரி யாருக்கும் புரியாத மாதிரி எழுதுறதுதான் பின்நவீனத்துவம்...அத எழுதுறவங்க தான் பின்நவீனத்துவ எழுத்தாளர்கள்....ஸ்ஸ்ஸ் அபா ...
@ கமல்
விளக்கத்துக்கு நன்றி சகா...!!
பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி கமல்....
நம்ம ஊரு அரசியல் வாதிகள்தான் இப்படி எதுவுமே இல்லாமே மணி கணக்கா பேசுவாங்க. நீங்க எதோ பெரிய அரசியல்வாதியா வருவிங்க போல இருக்குதே.
வாழ்த்துக்கள்
சில பேரு தூக்கம் வரணும்னா புத்தகம் எடுத்து படிப்பாங்க. இதனால்தான் தமிழ்ல குங்குமம் மாதிரி சில புத்தகங்கள் எல்லாம் விக்குது. :-)..
ஆனா உங்களுக்கு அந்த பிரச்சனையே இல்ல. யோசிக்க ஆரம்பிச்சாலே தூக்கம் வருதுன்னு சொல்றீங்க :)
@சோபிராம்
நமக்கு இந்த அரசியல்ல லாம் ஈடுபாடு இல்லைங்க...
இருந்தாலும் வாழ்த்துக்கள் க்கு நன்றி பாஸ்...
@சுபா
என்னங்க பண்றது .... மானுபாக்டுரிங் டிபெக்ட்!!!!
Post a Comment
வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க