Friday, September 18, 2009

வித்தியாசமான குரல்கள உங்களால கண்டுபிடிக்க முடியும் னா நீங்க ஒரு புத்திசாலி!!!!

எனக்கு பாட்டு கேக்குறது ரொம்ப பிடிக்கும்... நெறைய நேரம் பாட்டு கேக்குறது வழக்கம்... படிக்கும்போது, சமைக்கும்போது, தூங்கும்போது னு இப்டி பாரபட்சமே இல்லாம எல்லா நேரமமும் பாட்டு கேக்குறது பழக்கம்..

நான் கல்லூரி முதல் ஆண்டு படிக்கும் போது எங்க ஆங்கில ஆசிரியர் சொன்னாரு "வித்தியாசமான குரல்கள உங்களால கண்டுபிடிக்க முடியும் னா நீங்க ஒரு புத்திசாலி " னு... அதுல இருந்து எல்லா பாட்டையும் யாரு பாடினாங்க னு தெரிஞ்சுக்கணும் னு ஒரு ஆர்வம்...

ஏன்னா நம்ம புத்திசாலி னு நம்மளயே நம்பவைக்கறது ரொம்ப கஷ்டம் பாருங்க... அப்டி ஆரம்பிச்சு இன்னைக்கு ஓரளவு எல்லா பாட்டும் யாரு யாரு படுறாங்க னு தெரியுது...

ஆனா பாருங்க பாட்டு பாடுனவங்கள தெரிஞ்சுக்குற ஆர்வத்துல்ல பாதி கூட பாட்டு எழுதுனவங்க யாரு னு தெரிஞ்சுக்கறதுள்ள இல்ல... எத்தனையோ நல்ல பாட்டு கேட்க்குறேன் ஆனா அதலாம் யாரு எழுதினாங்க னு தெரியாது..... பாடல் எழுதுற கவிஞர்கள் பேர் தெரியும் ஆனா அவங்க என்ன என்ன பாட்டு எழுதிருக்காங்க னு தெரியாது... தாமரையோட பாடல்கள் மட்டும் தான் பாடல் ஆசிரியர் பேரோட தெரியும்.. ஏன்னா அவங்க பாட்டு மட்டும் தான் கான்ஸ்டன்ட் காம்பிநேஷின் ஹிட் ஆச்சு, சோ கவுதம் மேனன் படம் னா தாமரை தான் பாடல்கள் னு மனசுல பதிஞ்சு போச்சு...

உங்களுக்கு எல்லா பாடல் ஆசிரியர் பேரும் தெரியுமா??
அப்ப கீழ உள்ள பாடல் வரிகள் லாம் யாரு எழுதுனது னு சொல்லிட்டு போங்க...

"உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
இந்த ஜன்மம் வீணென்று போவேனோ ??"
(பூவெல்லாம் உன் வாசம்)

" காதல் நெருப்பின் நகரம்
உயிரை உருக்கி தொடரும் பயணம்
காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் "
காதல் மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்"
(வெயில்)

"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகு வர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ "
(சில்லுனு ஒரு காதல்)

"படுத்தும் பொசுக்குனு தூங்கும் பய
பித்துக்குளி போல இப்ப முழிக்குரானே
வெள்ளன எந்திருச்சு ஓடும் பய
சுள்ளுன்னு சூரியன பாக்குறேனே

அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்துக்கொண்டேன்
நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே என் வயதறிந்தேன்"
(காதல்)

" ஒரு நாளில் வாழ்கை இங்கே
எங்கும் ஓடி போகாது
மறுநாளும் வந்து விட்டால்
துன்பம் தேயும் தொடராது
எதனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும்
பூமி இன்னும் பூ பூக்கும்"
(புதுப்பேட்டை)

"பேச எண்ணி சில நாள் அருகே வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன் ஏமாற்றி..

இரவும் அல்லாத
பகலும் அல்லாத
பொழுதுகள்
உன்னோடு கரையுமா??!!

கரைகள் அண்டாத
காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்த்திட்டாய்??!

தடையில்லை சாவிலும் உன்னோடு வர ..."
(சுப்பிரமணியபுரம்)

இதெல்லாம் சாம்பிள் க்கு கேட்டது... பதில் சொல்ல யாராச்சும் கிடைச்சா இன்னும் கேக்குறதுக்கு நிறைய பாடல் வரிகள் இருக்கு....
பதில் சொல்லுவிங்க தானே ??!!

26 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

உங்கள் தோழி கிருத்திகா said...

poovelam unn vaasam thaalatum kaatre vaa paatu eluthinathu mr.vairamuthu(confrm)

swizram said...

ஒரு டவுட் இருந்துச்சு..
கன்பார்ம் பண்ணதுக்கு நன்றி கிருத்திகா!!

அப்டியே மத்த பாட்டுக்கும் சொன்னா சந்தோசப்படுவேன்.....!!

உங்கள் தோழி கிருத்திகா said...

athe maathiri kangal irandaal yugabaarathinu nenakkaren...therila

லோகு said...

காதல் நெருப்பின் நகரம் - நா. முத்துக்குமார்.

swizram said...

நன்றி நன்றி நன்றி......

கவிஞர்கள் பெயர எல்லாரும் தெரிஞ்சு வச்சுருக்கிங்க.. குட்... இன்னிமே நானும் தெரிஞ்சுக்குறேன்....

லோகு said...

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே - Veturi Sundararama Murthy

swizram said...

Veturi Sundararama Murthy இவரு எழுதுன பாட்டு வேற எதுவாச்சும் தெரியுமா லோகு ?!

லோகு said...

புதுப்பேட்டையும் நா. முத்துக்குமார்.. காதல் பட பாடலுக்கு தெரியல..

லோகு said...

இல்ல, இல்ல தப்பு நடந்துடுச்சு.. சாரி.. Veturi Sundararama Murthy அந்த படத்தோட தெலுங்கு Version குத்தான் பாட்டு எழுதி இருக்கார். தமிழ் ல எழுதுனது வாலி.. அவர் ஒரு தெலுங்கு கவிஞர்.. அவர் எழுதிய தமிழ் பாடல்கள் எதுவும் தெரியவில்லை..

லோகு said...

Veturi Sundararama Murthy தமிழ் பாடல்கள் எதுவும் எழுதவில்லை..

Sorry :((((

லோகு said...

Veturi Sundararama Murthy தமிழ் பாடல்கள் எதுவும் எழுதவில்லை..

Sorry :((((

லோகு said...

கண்கள் இரண்டால் - சசிக்குமார்.

swizram said...

வாலி னு சரியான பதிலும் சொல்லிட்டதுனால மன்னிச்சுட்டேன் போங்க....!!

swizram said...

சசிக்குமாரா....??? உறுதியா தெரியுமா லோகு???

லோகு said...

இல்ல.. மறுபடியும் தப்பு.. சுப்ரமணியபுரம் தீம்க்குத்தான் சசிக்குமார்.. கண்கள் இரண்டாலுக்கு தாமரை.. மற்ற பாடல்கள் யுகபாரதி..

swizram said...

இப்படி தப்பு தப்பா சொல்லிட்டு அப்புறம் திருத்துனா என்ன அர்த்தம்....?

லோகு said...

யாரும் பதில் சொல்றதுக்கு முன்னாடி நாம சொல்லிரணும்னு நினைக்கறேன்னு அர்த்தம்..

swizram said...

சரியா சொன்னாவுல பரவால.....!!

நீங்க பொறுமையாவே சொல்லலாம்... வேற யாரும் பின்னூட்டம் போட்ற மாதிரி தெரியல..

லோகு said...

நிறைய பிளாக்ஸ் படிங்க, பிடிச்சு இருந்த கமென்ட் போடுங்க. அப்பத்தான் உங்க பிளாக் இருக்கறது நெறைய பேருக்கு தெரியும். நிறைய பேர் வருவாங்க.. நல்லா எழுதறீங்க, ஆனா கண்டுக்கப்படாம இருக்கறது வருத்தம்.

இல்லேன்னா கத்துக்குட்டிங்கற பெயரை மாத்திட்டு சொந்த பேர்ல எழுதுனா, தானவே நிறைய கூட்டம் வரும்.. பொண்ணுங்க பேருக்கு உள்ள பவர் அப்படி.. :))))))))))

swizram said...

இப்பதான் உங்கள மாதிரி கொஞ்சம் கொஞ்சம் பேரா படிக்க ஆரம்பிச்சுருக்காங்க...

பாப்போம்... இன்னும் கொஞ்சம் கிறுக்கி ஒரு சுமாரான பதிவர் னு பேரு வாங்குனா போதும் பா....

பேரு மாத்தனும் னு னா சொல்லுறிங்க.. ஏற்கனவே இந்த பெயர் ல ஒரு பதிவர் இருக்காங்க...
நீங்க தான் ஒரு நல்ல பேரா சொல்லுங்க !!

லோகு said...

எனக்கு பசிக்குது... இப்ப பேர் யோசிச்சா எல்லாமே சாப்பாட்டு ஐட்டமா நியாபகத்துக்கு வருது.. சாப்ட்டுட்டு வந்து யோசிக்கிறேன்..

swizram said...

நல்லா சாப்பிட்டுட்டு பொறுமையாவே சொல்லுங்க... ஒன்னும் அவசரம் இல்ல....

லோகு said...

ரசனைக்காரி, ரசிகை, ராம், ராம்லக்ஷ்மி இப்படி ஏதாவது ஒன்னு வைக்கலாம்.. பதிவோட தலைப்பு (என் ரசனை) நல்லாத்தான் இருக்கு..

swizram said...

பேர் மாத்திட்டேன்.. உங்க சாய்ஸ் தான்... பாப்போம் என்ன நடக்குது னு...

Unknown said...

பூவெல்லாம் உன் வாசம்: வைரமுத்து
வெயில்: நா.முத்துக்குமார்
சில்லுனு ஒரு காதல்: வாலி
புதுப்பேட்டை : நா.முத்துக்குமார்

காதல், சுப்ரமணியபுரம் படங்களுக்கு பாட்டு எழுதினது யாருன்னு ராகல போடல :((
நல்லாத்தான் எழுதுறீங்க...கண்டின்யு :))

swizram said...

@ கமல்

"கண்கள் இரண்டால்" தாமரை எழுதினது...

இந்த காதல் பட பாட்டு தான்... யாரு எழுதுனதுனே தெரியல...!!
கூடிய சீக்கிரம் யாராச்சும் பதில் சொல்லுவாங்க னு நம்பிக்க தான்....

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location