Sunday, September 20, 2009

[ரசனைக்குரிய படம்] The Game Plan - ஒரு சிறுமிக்கும் தந்தைக்குமான உறவு மிகவும் அழகானது !!

எல்லா குழந்தைகளுக்கும் முதல் கதாநாயகன் அவரவருடைய தந்தை தான். அதே போல் குழந்தையின் ஒவ்வொரு செயலுக்கும் முதல் ரசிகன் தந்தையே. (இதை இந்த இடத்தில அழுத்திச் சொல்ல ஆசைபடுகிறேன். தந்தைகளுக்கு இருக்கும் ரசனையை ஏனோ அவர்கள் வெளிப்படுத்த பல சமயங்களில் தவறிப்போகிறார்கள்)
கிங்க்மான் பாஸ்டன் ரீபெல்ஸ் கால் பந்து அணியை சேர்ந்தவர். நியூயார்க் ட்யுக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மாபெரும் வெற்றிக்கு காரணமானவர். ஆட்டத்தின் மறுநாள் கிங்க்மானிற்காக ஒரு அதிசியம் அவர் வீட்டின் கதவை தட்டியது, அது அவருக்கும் அவரது முன்னால் மனைவிக்கும் பிறந்த பேட்டன் என்ற எட்டு வயது சிறுமி.


பேட்டன் தான் கிங்க்மானின் மகள் என்றும், தன்னுடைய தாய் அவரை பார்ப்பதற்காக அவளை அங்கு அனுபியுள்ளதாகவும் கூறுகிறாள். ஸ்டெல்லா பாக் என்ற கிங்க்மானின் ஏஜெண்டோ பேட்டனின் வரவு கிங்க்மானின் அடுத்தகட்ட விளையாட்டுபோட்டிகளை பாதிக்கும் என்று நினைக்கிறாள்.


ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் , நிருபர்களின் கேள்விகளால் திண்டாடும் கிங்க்மானை பேட்டன் தன்னுடைய புத்திசாலித்தனமான பதில்களால் காப்பாற்றுகிறாள். இதற்க்கு உபகாரமாக அவள் வேண்டுவது பாலே நடன வகுப்பில் இடம். இதற்க்கு சம்மதிக்கும் கிங்க்மானும் அவளை அவள் விரும்பிய நடன ஆசிரியையிடம் சேர்த்துவிடுகிறார். அந்த ஆசிரியை கிங்க்மானும் தாங்கள் நடத்தும் நடன நாடகத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறார்.


எதிர்பாராதவிதமாக ஒரு நாள் பேட்டன் தன்னுடைய அம்மாவிற்கு தான் இங்கு வந்தது தெரியாது என்று உளறிவிடுகிறாள். தன்னிடம் பொய் சொல்லியதால் கிங்க்மானுக்கு பேட்டன் மேல் கோவம் வருகிறது. அப்பொழுது சாப்பிட்ட உணவு ஒத்து கொள்ளாமல் போவதால் மயக்கம் போடும் பேட்டனை , பதற்றத்துடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் கிங்க்மான்.



மருத்துவமனையில் சேர்க்கப்படும் பேட்டனை பார்க்கவரும் அவளது பெரியம்மா சொன்னதற்கு பிறகே பேட்டனின் தாயும் தன்னுடைய முன்னால் மனைவியுமான சாரா தற்பொழுது உயிருடன் இல்லை என்பதை கிங்க்மான் அறிந்து கொள்கிறார்.

மருத்துவமனையில் இருந்து பேட்டன் தன்னுடைய பெரியாம்மாவுடனே சென்று விடுவதால் இங்கு கிங்க்மான் தனியாள் ஆக்கப்படுகிறார். இறுதி கால் பந்து போட்டியில் பேட்டனின் நினைவுகளுடன் இருக்கும் கிங்க்மானால் கவனமாக விளையாட இயலவில்லை. ஒரு கட்டத்தில் தோள்பட்டையில் அடிபடவே கிங்க்மான் ஓய்வறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அந்த போட்டியை காண பெரியம்மாவுடன் வந்திருக்கும் பேட்டன் அவரை ஓய்வறைக்கு சென்று சந்திக்கிறாள். தன்னுடைய தந்தை ஒருபோதும் தோற்றுபோவதில்லை என்று கூறி கிங்க்மானுக்கு உற்சாகமூட்டுகிறாள். அவளின் உந்துதலுக்கு பின் போட்டியில் மீண்டும் பங்கு பெரும் கிங்க்மான் அந்த போட்டியில் வென்றார் என்றும் சொல்லவேண்டுமா ?!!

ஒரு தந்தைக்கும் சிறுமிக்குமான அழகான உறவை மிக அழகாக உரைத்த படம். இந்த படம் பார்க்கும்போது நீங்கள் தந்தையாக இருந்தால் உங்கள் மகள் நினைவும், மகளாக இருந்தால் தந்தையின் நினைவும் வரும் என்பது நிச்சயம்.

சொல்ல மறந்துவிட்டேன் பேட்டனாக நடித்த அந்த சிறுமி Madison பேட்டிஸ் கொள்ளை அழகு. கிங்க்மானாக நடித்தவர் Dwayne ஜோத்ன்சொன்.



என்னால் இயன்றவரை உரைநடை தமிழில் எழுதுவதற்கு முயற்சித்து இருக்கிறேன். பிழை ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

பி.கு:
இந்த படத்த முந்தாநேத்து ஸ்டார் மூவிஸ்ல பாத்துட்டு இந்த பதிவ போடலைனு சொல்லிக்க பிரியப்படுறேன். கல்லூரி நாட்கள்ல இருந்து எங்க பல பேருக்கு ரொம்ப பிடிச்ச படம் அதான் உங்ககிட்ட பகிர்ந்துக்குறேன்.
அவ்ளோ தான்.

13 நினைக்குறத சொல்லிட்டு போங்க!!:

உங்கள் தோழி கிருத்திகா said...

நான் பார்த்த சிறந்த ஆங்கில படங்களில் இதுவும் 1...
கிட்டத்தட்ட 50 தடவைக்கு மேல பார்த்திருப்பேன்..
விமர்சனம் படிச்சத்துக்கப்பரம் திரும்ப பார்க்கணும் போலருக்கு..
ராக் கலக்கிருப்பாரு..அதவிட அந்த பாப்பா.கடசில அந்த டீம் மெம்பெர்ஸ் கூட நடந்துவர்ரத பாக்க சூப்பரு...

தொடரட்டும் உன் ப்ணி

swizram said...

@ கிருத்திகா
நன்றி நன்றி நன்றி... முதல் பின்னூட்டமா போட்டதுக்கு....
இன்னும் நெறையா படம் மைன்ட் ல வச்சுருக்கேன்... ஒரு நாளுக்கு ஒரு படம் என்கிற விகுதியில் எழுதுவேன்... இதே மாதிரி அத்தனைக்கும் பின்னூட்டம் இட்டா சந்தோசம் தான்.....

Ungalranga said...

அழகான படம்பா.. நானும் பார்த்து சிலிர்த்தேன்..!! மேலும் ரசியுங்கள்!!

Have a Nice Day!!

Ungalranga said...

நீங்களும் சேலம் தானா?

எந்த ஏரியாங்க நீங்க?

பாலா said...

ஏம்மா ஸ்டார் மூவிஸ் ல படம் பார்த்துட்டு வந்து இங்க அள்ளி வுட்டு இருக்கியா???
இப்போதான்லா தெரிஞ்சுது
எனி வே
உங்க விமர்சனம் நல்லா இருக்கு
நானும் பார்த்துட்டேன்கோ இந்த படத்தை

swizram said...

@பாலா

இந்த படம் நான் கல்லூரியில் படிக்கும்போது பார்த்தது.. ஸ்டார் மூவிஸ்ல ரெண்டு நாள் முன்னாடி இதை பார்க்க நேர்ந்ததால் இத பத்தி எழுதினேன் இப்போ.. உங்கள மாதிரி எல்லாரும் பாத்துருக்க மாட்டாங்க.. அப்படி பாக்கதவங்களுக்கு தான் இந்த பதிவு.....

அப்புறம் உங்களுக்கு ஒன்னு சொல்லிக்க ஆசைபடுறேன்.. ஸ்டார் மூவிஸ்லயோ ஜி தொலைகாட்சியிலயோ போடாத படத்த பத்திதான் தான் எழுதனும் னு சொன்னா நீங்களோ நானோ படம் தயாரிச்சு அத பத்தி தான் எழுதனும்.

Unknown said...

///அப்புறம் உங்களுக்கு ஒன்னு சொல்லிக்க ஆசைபடுறேன்.. ஸ்டார் மூவிஸ்லயோ ஜி தொலைகாட்சியிலயோ போடாத படத்த பத்திதான் தான் எழுதனும் னு சொன்னா நீங்களோ நானோ படம் தயாரிச்சு அத பத்தி தான் எழுதனும்.///

அது :))))))))))))))))
படம் பாக்கறேன்......

Ungalranga said...

//அப்புறம் உங்களுக்கு ஒன்னு சொல்லிக்க ஆசைபடுறேன்.. ஸ்டார் மூவிஸ்லயோ ஜி தொலைகாட்சியிலயோ போடாத படத்த பத்திதான் தான் எழுதனும் னு சொன்னா நீங்களோ நானோ படம் தயாரிச்சு அத பத்தி தான் எழுதனும்.//

இது ஷாட்டு..!!

“நல்ல” பதில்!!

swizram said...

@கமல்

பாருங்க பாருங்க....!!

@ரங்கன்

இந்த பதிலுக்கு யாரவது கொட்டுவாங்க னு நினச்சேன்... "நல்ல" பதில் னு சொன்னதுக்கு நன்றி பா!!

Ungalranga said...

தோழி..

ஒரு சின்ன உதவி.. நீங்க சேலம்னு உங்க ஃப்ரொபைலில் பார்த்தேன்.

நானும் 24 வருஷமா சேலத்தில் தான் இருக்கேன்.

சேலத்துலேயே ஒரு பதிவர் சந்திப்பு வெச்சிக்கலாமான்னு யோசிக்கிறேன்..

நீங்கள் இதை பற்றி மேலும் பேச ungalranga@gmail.com க்கு தொடர்பு கொள்ளலாம்..

நன்றி..

Have a Nice Day!

swizram said...

@ரங்கன்

உங்க ப்ரொபைல்ல 22 வயசு னு பாத்த மாதிரி நினைப்பு... இப்ப 24 னு வருஷமா சேலத்தில் இருக்கதா சொல்றீங்க.. ஒரே முரண்பாடா இருக்குது போங்க... பதிவர் சந்திப்புல கலந்துக்குற அளவு நான் ஒன்னும் எழுதிக்கிழிக்கல... எதுனா உருப்படியா எழுதுனதுக்கு அப்புறம் அத பத்தி யோசிக்கலாம். நீங்க உங்க பதிவர் சந்திப்ப நல்ல முறையில் நடத்த வாழ்த்துக்கள்.

Ungalranga said...

oh my god.. sorry !

எனக்கு 22 தான்.. அது டைப்பிங் மிஸ்டேக்..

உங்கள் வாழ்த்துக்கு நன்றி..!!

swizram said...

நல்லா பண்ணிங்க மிஸ்டேக்க...விடுங்க பாஸ்..

Post a Comment

வந்தது தான் வந்துடீங்க... நல்லதா நாலு வார்த்த எழுதிட்டு போனிங்கன்னா சந்தோஷப்படுவேன் ....
தமிழ் ல கிறுக்க

உங்களால முடிஞ்சா... இன்னும் ரெண்டு கிளிக் சேர்த்து பண்ணமுடியும் னா ஒரே ஒரு ஓட்டு போடுங்க !!

படிச்சவங்க ரேட்டிங்!!!

Blog Widget by LinkWithin
Get paid To Promote at any Location