
உங்களுக்கு சாண்ட்டா கிளாஸ்ஸ பிடிக்குமா ??!!!
"சாண்ட்டா கிளாஸ்" இப்பிடி ஒருத்தர் நிஜமாலுமே இருக்காரா?? சின்ன பிள்ளையா இருந்ததுல இருந்து இந்த சந்தேகம் எனக்கு உண்டு...

எவ்ளோ அழகா பப்லியா அந்த கதாபாத்திரத்த உருவாக்கி இருக்காங்க... பாத்தவுடனே ப்ரேன்ட்லியா தோனுற மாதிரி ஒரு உருவம், அவருக்குன்னு ஒரு தனி விதமான வாகனம், செவப்பு டிரஸ் , செவப்பு குல்லா, வெள்ளந்தியான சிரிப்பு இப்பிடினுலாம்...
அப்பிடி யாரையும் இதுவரைக்கும் பாக்கலைனாலும் எனக்கு என்னவோ அந்த முகம் தெரியாத கதாபாத்திரம் மேல ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது...

எனக்கு வெவரம் தெரிஞ்ச வயசுல நாங்க இருந்த காலனி முழுக்க சின்ன பசங்களா தான் இருந்தோம்.. அப்பலாம் கிறிஸ்துமஸ் அப்பிடினா ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்...
காலனில உள்ள யாராவது ஒரு அண்ணனோ அங்கில்லோ கிறிஸ்துமஸ் தாத்தா
( சாண்ட்டா கிளாஸ்ன்னு சொல்லறத விட தாத்தான்னு சொன்னாதான் ஒரு ஒட்டுதல் கிடைக்குது என்ன செய்ய ???!!!) வேஷம் போட்டுக்கிட்டு அங்க உள்ள எல்லாருக்கும் ஏதாவது பரிசு கொடுப்பாங்க...

சின்னதோ பெருசோ, மிட்டாயோ பொம்மையோ எது பரிசா கிடைச்சாலும் அவ்ளோ சந்தோசமா இருக்கும்.. என்னதான் வீட்ல உள்ளவங்க பாத்து பாத்து நமக்கு எல்லாம் வாங்கிகொடுத்தாலும் நம்ம எதிர் பாக்காத ஒரு நேரத்துல யாரோ பரிசு கொடுக்கும்போது ஒரு தனி சந்தோசம் இருக்கத்தான் செஞ்சது!! நம்ம ப்ரெண்டுக்கு கொடுத்த பொம்ம நம்மழுத விட அழகா இருக்குன்னு நினைச்சப்போ லேசா பொறமை எட்டிபாக்கும் அப்புறம் வீட்டுல அழுது அடம்பிடிச்சு எனக்கும் அதே மாதிரி பொம்ம வாங்கினது தனிகதை....!!!
அதுக்கு அப்புறம் வேற ஊர் வேற ஸ்கூல்ன்னு என்னோட கிறிஸ்துமஸ் மாறிபோச்சு.. நான் படிச்ச கிறிஸ்டியன் ஸ்கூல்ல இயேசு பிறந்த அந்த மாட்டு தொழுவம் செட்ட போட்டு இயேசு எப்பிடி பொறந்தாரு, என்னலாம் சொன்னாரு எப்பிடி அவர சிலுவைல அரஞ்சாங்க அப்டினுலாம் ஒரே கதைய வருஷா வருஷம் வேற வேற பிள்ளைங்க நடிச்சு காமிப்பாங்க... அப்புறம் ஏதாவது ஒரு அக்கா கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டுக்கிட்டு "ஜின்கிள் பெல்ஸ் ஜின்கிள் பெல்ஸ்" ன்னு பாடிகிட்டே மிட்டாய் கொடுப்பாங்க...

அப்புறம் காலேஜ்ல கிறிஸ்துமஸ்க்கு லீவ் கூட விட்டது கிடையாது.... எதோ போன போவட்டும்ன்னு கிறிஸ்டியன் பொண்ணுங்க பசங்களுக்கு மட்டும் "OD" கொடுப்பாங்க... கிறிஸ்துமஸ் கேக்ன்னு அவங்க கொடுக்குற தம்மாதுண்டு பீஸ்க்கு கிளாஸ் மொத்தமும் சண்டைபோட்டு ஆளுக்கு ஒரு வாய் கிடைச்சாலும் அந்த கேக்கோட டேஸ்ட் ச்ச சான்சே இல்ல போங்க!!!!
எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டேன்ல... அதாங்க என் பிரெச்சனை..
இந்த பதிவ போடுறதுக்கு ஒரு காரணம்... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்!!

உண்மைலயே சாண்ட்டா கிளாஸ்ன்னு ஒருத்தர் இருகாப்புலய??!! அப்பிடி இருந்து அவரு எங்க இருப்பாரு??... கிறிஸ்டியன்ஸ்க்கு மட்டும் பரிசு கொடுப்பாரா??? இப்பிடி பரிசு கொடுகுறதுக்காகவே வேற ஏதாவது கதாபாத்திரம் இருக்கா உலகத்துல???!!
மேல உள்ள எல்லா கேள்விக்கும் இல்லைங்கறது பதிலா இருந்தாலும் சாண்ட்டா கிளாஸ்ஸ எனக்கு ரொம்ப பிடிக்கத்தான் செய்யுது...

இத படிச்சு ஓட்டு போடுற எல்லாருக்கும் இன்னைக்கு யாராவது சாண்ட்டா கிளாஸ் மாதிரி ஏதாவது பரிசு கொடுப்பாங்க...!! :)
என்ன இந்த பொண்ணு கிறிஸ்துமஸ்ஸ பத்தி பேசாம சாண்ட்டா கிளாஸ்ஸ பத்தியே பேசிருக்கு அப்டின்னு லாம் யோசிக்காதிங்க.... எனக்கு எது பிடிக்குதோ அவங்கள பத்தி தான் பேசமுடியும்.....
எல்லாருக்கும் என்னோட கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் !!!!